தர்ப்பைப் புல்லை ஏந்தி இறைவனைத் துதித்திடும் பிராமண சமுதாயது இளைஞர்கள் துப்பாக்கி ஏந்திச் சாகசம் செய்திட்ட சரித்திரச் சம்பவம் நினைத்துப் பார்க்கவே முடியாத – நிலைத்து நிற்கும் மாபெரும் காரியமாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிக்குப் பெயர் பெற்ற குற்றாலத்திற்கு அருகில் உள்ள செங்கோட்டையில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன் தான் வாஞ்சிதான். காட்டிலாகாவில் வேலை செய்து வந்தான். பிறகு பெரிய புரட்சி வீரராக

மாறி கலெக்டர் ஆஷைச் சுட்டுக் கொன்று அதே துப்பாக்கியைத் தனது வாயில் வைத்து, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாய்ந்து வீழ்ந்தான்.

பொன்னம்மாள்; வாஞ்சிநாதனின் சகோதரியின் மகள் தான் பொன்னம்மாள், பொன்னம்மாள் வயதுக்கு வருவதற்கு முன்பே வாஞ்சிநாதனுடன் பால்ய மணம் நடந்தது.
அவர்களின் முதலிரவு நடந்தததா என்று கூடத் தெரியவில்லை. பருவமடைந்த நாளில் இருந்து விதவைக் கோலம் பூண்டாள் பொன்னம்மாள். பசியும், பட்டினியுமாக வாழ்க்கை கழிந்தது.

சுதந்திரம் கிடைத்த பிறாகாவது அந்த அம்மாவுக்கு அரசு ஏதாவது செய்ததா என்றால் அதுவுமில்லை. அந்தத் தியாக சீலன் மனைவிக்கு பென்ஷன் கொடுக்க ஆயிரத்தெட்டு விதிமுறைகளை வகுத்து, கேள்வி கேட்பதிலேயே காலம் கடத்தியது காங்கிரஸ் ஆட்சி.
1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரச அவருக்கு கென்ஷன் கொடுக்க உத்தரவிட்டது.
தி.மு.க. ஆட்சியாளரிடம் யாசகம் வாங்கிச் சாப்பிடுவது வாஞ்சியின் மனைவிக்கு கேவலம் என்று எண்ணியோ, என்னவோ இயற்கை அந்தப் பென்ஷன் தொகை வரும் முன்னரே அவ்வமைiயாரை தன்னிடம் அழைத்துக் கொண்டது.

Leave a Reply