போபால் விசவாயு விபத்தில் பலாயிரம் அப்பாவி உயிர்களை காவு கொண்ட வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்பவிட்டுவிட்டு கண்டும் காணமல் அன்று  பாவா காட்டிய காங்கிரஸ் கட்சி,  விஜய் மல்லையாவை எப்படி தப்பவிட்டீர்?. எட்டி இருந்து பார்த்தால் கூட அவரை அடையாளம் காண முடியுமே என்று இன்றும் கண்டும் கானத்தை போல் பாவா காட்டுகிறது.

 

விஜய் மல்லையா 7000 யிரம் கோடி கடன் வாங்கியது காங்கிரஸ் ஆட்சியில் தானே?. திருப்பிக் கட்டாமல் போக்கு காட்டியதும் காங்கிரஸ் ஆட்சியில் தானே?. ஒழுங்காக கட்டாத நிலையிலும் மேற்கொண்டு 900 கோடி நிதி திரட்டியதும் 2013 ம ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் கடைசி நாட்களில் தானே? …

 

நிலைமை இப்படி இருக்க பாஜக அரசை குறை கூறலாமா?. பாஜக அரசு இருப்பதால் தானே 13 வங்கிகளின் கூட்டமைப்பினர் மல்லையாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முன் வந்தனர். நீதி மன்ற படியேறி மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று வழக்கும் தொடுத்தனர்.

 

இது வரை வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த வங்கிகள் வீருக்கொள்ள யார் காரணம்?. இந்தியாவில் சுதந்திரமாக சுற்றி திரிந்த விஜய் மல்லையா இப்போது இந்தியாவை விட்டு பறப்பதற்கும் யார் காரணம்?. அதிகாரம் ஊழல்களுக்கு ஆட்படாமல் தன்பணிகளை செய்கிறது அதுவே காரணம்.

 

ஏன் விஜய் மல்லையா  கைது செய்யப்பட வில்லை?. விஜய் மல்லையா ஒரு ராஜ்ய சபா எம்பி, அவர் மேல் உள்ள குற்றச் சாட்டுகள் சிவில் வழக்கு தொடபுடையது. சிவில் வழக்கு உள்ள ராஜ்ய சபா எம்.பி.,யை பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் கைது செய்ய முடியாது கைது செய்வது என்ன தடுத்து வைப்பதோ!. விசாரணைக்கு சம்மன் அனுப்பவோ கூடாது .

இதை அறிந்ததால் தான் என்னவோ மல்லையா வெளிநாடு போவதற்கு முன்னர் ராஜ்ய சபாவில் கலந்து கொண்டிருக்கிறார். மத்திய அரசும் வீண் சட்ட சிக்கலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கலாம். எனவே இதுக்கூட காரணமாக இருக்கலாம்.


தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply