உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

வாரணாசி இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களில்  ஒன்றாகும், தினமும் இங்கு கங்கை ஆற்றின் கரை ஓரத்தில் மாலை நேரத்தில் தினமும்  தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் கலந்து-கொள்வதற்காக ஷீட்லா காட் பகுதியில் கிட்டத்தட்ட   6000 த்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு , திடீரென குண்டு-வெடிப்பு ஏர்ப்பட்டது   . இதனால் பக்தர்களிடையே பெரும் பதற்றம் உருவானது .ஒரு இளம் பெண்  கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர்  காயமடைந்தனர்.

குண்டு-வெடிப்பு எப்படி ஏர்ப்பட்டது, இதற்க்கு காரணம் யார்  என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர் , இதை தொடர்ந்து , உத்தரப்பிரதேசம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply