பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் இருக்கும் அனுமன் மலையில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது .

 

திருமணத்தை காஞ்சி சங்கராச்சாரியார் தலைமை-தாங்கி நடத்தி வைக்கிறார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே கலந்துகொள்கின்றனர் .

மேனகாவும், வருண்காந்தியும் உத்தரப்பிரதேசத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் அங்கு வைத்து திருமணம் நடைபெறுகிறது . திருமண வரவேற்பு நிகழ்ச்சி டில்லியில் மார்ச் 8 ஆம் திகதி நடக்கிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ப்பட காந்தி குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என வருண்காந்தியின் தாய் மேனகா காந்தி தெரிவித்துள்ளார் .

{qtube vid:=XSYzqCF49Vg}

Leave a Reply