கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மலைபெய்து வருகிறது, கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் காய்கறி விளைச்சல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

கனமழை காரணமாக காய்கறி தட்டுப்பாடு உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஒரு மாத காலமாக காய்கறி விலை குறையாமல் ஏறுமுகமாக உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்திறங்கும். ஆனால் லாரிகளின் வரத்து மிகவும் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply