இஸ்லாமிய நாடான மலேசியாவில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சென்சார் அனுமதி அளித்து படம் ரிலீசும் ஆகியுள்ளது. அனால் ரிலீஸ் ஆகவேண்டிய நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரானபடம் என்று தமிழ்நாடு அரசு 15 நாட்கள் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் பிரகாஷ்ராஜ் குறித்து குறிப்பிடும்போது, “மலேசியாவில் விஸ்வரூபம் வினியோகஸ் தர்கள், ரசிகர்களிடம் பேசினேன் , இது ஒருமுஸ்லிம் நாடு, அங்கு விஸ்வரூபம் சென்சாரால் ஏற்கபட்டு ரிலீசும் ஆகியுள்ளது” விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கு எதிரானபடம் அல்ல படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனநாயக_நாட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழி சென்சார்போர்டுகள் விஸ்வரூபம் படத்துக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது எங்கிருந்து இந்தத்தடை வந்தது ,விஸ்வரூபம் தடைசெய்யப்பட்டது அநியாயம், என்றும் கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

Leave a Reply