நரேந்திரன் பிறப்பும் இளமையும்  கல்கத்தா நகரில் சிமுலியா என்ற பகுதியில் வழக்கறிஞராக விசுவநாத தத்தர் இருந்தார் .அவரின் மனைவி புவனேசுவரி தேவி 1863 ,ஜனவரி 12ம் நாள் பொங்கல் நாளன்று திங்கட்கிழமை (கிருஷ்ணா சப்தமி திதி ,தனுசு லக்கனம் ,கன்னி ராசி ,ஹஸ்த நட்சத்திரம் )காலை 6 மணி 33 நிமிடம் 33 வினாடியில் ஓர் அழகிய ஆண் மகனை ஈன்றெடுத்தார் .

காசி வீரேசுவர சிவபெருமானின் அருளால் பிறந்த குழந்தை ஆதலால் ,புவனேசுவரி அவனுக்கு வீரேசுவரன் என்று பெயர் இட்டார் .அதை சுருக்கி 'பிலே 'என்று செல்லமாக அழைக்கலாயினா.பின்னாளில் நரேந்திர நாத் என்ற பெயர் வழங்க பெற்றார் .சுருக்கமாக நரேன் என்று அழைத்தார் .

காவி அணிந்த துறவியர் நரேனை மிகவும் கவர்ந்தனர் ,கையில் யது கிடைத்தாலும் அவர்களுக்கு கொடுத்து விடுவான் .வேறு எதுவும் கிடைக்கா விட்டால் உடுத்திருக்கின்ர துணியையே கொடுத்து விடுவான் .

1871ல் நரேனுக்கு எட்டு வயது இருக்கும் பொது ஈசுவர சந்திர வித்யாசாகரின் மெட்ரோபாலிடன் பள்ளியில் சேர்த்தார்கள் .

'நரேன் பிறவியிலே தியான சித்தன் 'என்று பின்னளில் கூறுவார் ஸ்ரீ ராமகிருஷ்ணர் .அதாவது முந்தைய பிறவிகளில் தீவிர தியானம் செய்து நிறைநிலையை கண்ட ஒருவர் என்பது இதன் பொருள் .நாள்தோறும் நரேன் கண்ட காட்சிகள் ஏராளம் .ஏன் ,அவன் ஒவ்வொரு நாளும் இரவில் கண்களை மூடியதும் அவனது புருவ மத்தியில் ஓர் ஒளி தோன்றும் .

பல வண்ணங்களை அள்ளி இறைத்தபடி அந்த ஒளி படிப்படியாகப் பெருகி பெரிதாகும் .கடைசியில் அந்த ஒளித்திரன் வெடித்து சிதறி அவனது உடம்பு முழுவதையும் வெண்ணிறத் தண்ணொளியில் முழுக்காட்டும் . அந்த ஒளியில் துயில் கொள்வான் அந்த உன்னத பாலகன் .

1880 ஜனவரியில் தமது பதினேழாம் வயதில் நரேந்திரர் பிரசிடென்சி கல்லூரியில் முதற்கலை பிரிவில் சேர்ந்தார் . முதலாம் வருடம் தொடர்ந்து கல்லூரி சென்றார் . ஆனால் இரண்டாம் வருடம் மலேரியா கண்டதால் பல நாட்கள் வீட்டில் ஓய்வும் சிகிச்சையும் பெற்றார்.

1881ல் எப் .எ தேர்வில் இரண்டாம் வகுப்பில் தோறினார் . அதே கல்லூரியில் 1884 பி.எ தோறினார் .இந்த நாட்களில் நரேந்திரன் திருமணப் பேச்சுகள் தொடங்கின.சிலர் ,அதிகமாக வரதட்சணை தர முன் வந்தனர் .சிலர் ,அவன் மேற்படிப்பிற்கு இங்கிலாந்த் செல்ல செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர்.

ஆனால் எதற்கும் கட்டுப்பட விரும்பாத நரேந்திரன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை .இப்போது நரேனுக்கு தேவையாக இருந்தது 'உண்மையை நேருக்கு நேர் கண்டிருக்கிறேன் 'என்று சொல்லத்தக்க ஒருவர் . அது 1881 நவம்பர் .நரேந்திரரைச் சந்தித்த பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுமார் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்ந்தார்.ஆரம்ப காலத்தில் வாரத்தோறும் ஓரிரு முறை தவறாமல் தட்சிணேசுவரம் சென்று வந்தார் நரேன். பரஸ்பர அன்பும் பரிவு பரிசோதனை , உயர் அனுபவம் என்று அந்த அற்புத குருவும் அருமைச் சீடரும் வாழ்க்கையை நடத்தினர் .

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.