கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை, தேர்தல் நடத்துவதற்கு சிரமமான மாநிலங்களின் பட்டியலில் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்து இருந்தன. 2006க்கு பிறகு இந்த பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளது ,” என்று , முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கோபால்சாமி பேசியதாவது:

மிக சிறந்த ஆட்சியாளர்களை தேர்வு செய்வதற்கு , மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும். கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு மிகவும் சிரமமான பகுதிகளின்-பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள் இடம்பெற்று இருந்தன , 2006க்கு பிறகு தமிழகம் முதல் இடத்தை பிடித்துவிட்டது . வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுகளை-வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி விட்டது என்று தெரிவித்தார் .

மேலும் ஜனநாயக நாட்டில் பணத்துக்காக ஓட்டு போட்டால் , அடுத்த ஐந்தாண்டுகள் பணம் கொடுத்தவன் தான் கொடுத்த பணத்தை-விட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பதார்க்கே விரும்புவான் . நல்ல பிரதிநிதிகளை தேர்தலில் தேர்ந்து எடுக்காவிட்டால் மிகவும் கஷ்டப்பட வேண்டிவரும் என்று கோபால்சாமி பேசினார்.

THAMARAI TALK
பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் படித்தவர்களும் விபரம் தெரிந்தவர்களும் அதிகம் ஆனால் இவர்களையே மாற்றிவிட்டார்கள்,

Leave a Reply