நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான் என சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம்சிங், சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசிநாளான இன்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம்சிங் யாதவ் பேசுகையில், எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்; எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள் தான் என கூறினார். அப்போது அவரின் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி அமர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி முலாயம் சிங் கருத்திற்கு தலை வணங்குகிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியது உள்ளது. முலாயம் சிங் வாழ்த்தை பெற்றதை பெருமையாக என்னுகிறேன் என்றார்.

Leave a Reply