அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே உறவை பாதிக்கும் வகையில் ஆவணங்களை வெளியிட கூடாது என அமெரிக்க அரசு சார்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அமெரிக்க-அரசின் சட்ட ஆலோசகர் இந்தகடிதத்தை விக்கிலீக்ஸ் நிர்வாகத்திற்க்கு அனுப்பியுள்ளார்.இவ்வாறு ஆவணங்களை வெளியிடுவது/ சட்ட விரோதமான செயல் என்றும், இதன் காரணமாக அமெரிக்க நலன் பாதிக்கப்படும் என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை விக்கிலீக்ஸ் நிராகரித்துள்ளது மேலும் அதன் கூட்டணி நாடுகளை பற்றி 30லட்சம் ரகசிய ஆவணங்களைவெளியிடுவது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.