கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடம் இல்லை , அவர் தொடர்ந்து எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;

முதல்வர் எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா மேலிடம் முழுஆதரவு அளிக்கும் . பாஜக அரசுக்கு யார் தலைமை வகிப்பது என்கிற விசயத்தில் மாநிலத்தில் நாங்கள் குழப்பநிலையை உருவாக்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை. எனவே, எடியூரப்பா தொடர்ந்து தலைமை பொறுப்பு வகிப்பார். கர்நாடக மாநிலத்தில் முதல்-முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா வளர்ச்சி பணிகளை சிறப்பான  முறையில் நிறைவேற்றி வருகிறது.

வரவிருக்கும் தாலுகா  மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில்  பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர அனைவரும் ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும். எடியூரப்பாவின் தலைமையை எதிர்ப்பவர்களுக்கு தேர்தல்வெற்றி மூலம் சரியான பதிலடியை  கொடுக்க வேண்டும் யான கூறினார்.

Leave a Reply