கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது சொத்து கணக்கை நாளை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார் .

எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் நிலம், ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு_ எழுந்தது.

முதல்வரான பிறகு அவர் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கலை குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனை தொடர்ந்து தனது சொத்து கணக்கை ஞாயிறன்று வெளியிட போவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார் .பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே அத்வானியின் அறிவுரையின்படியே இந்தமுடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து குவித்திருப்பதாக காங்கிரஸ மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லை என தெரிவித்திருக்கும் எடியூரப்பா, அரசைக் கவிழ்ப்பதர்க்கான அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply