இது வரை தென்னிந்தியாவில் பெரிதாக அறியப்படாத பா.ஜ.க தலைவர் யோகி ஆதித்யநாத். இவர் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஐந்து முறை ஒரே தொகுதியில் இதுவரை MP ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். இந்த இனம்தான் இன்றும் பீகாரில் சவரத்தொழில் செய்பவர்கள். இவர் கோரக்நாத் மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். அத்துடன் ஒரு கூடுதல் செய்தி கோரக்நாத் மடத்தில் இருக்கும் பல பண்டிதர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல….!

இதுவரை இவரைப் பற்றி யாருமே அறியாத செய்தி ஒன்றை ஸ்ரீ சூரஜித் தாஸ்குப்தா தன்னுடைய பதிவில் கூறியுள்ளார். தெருவில் அலைந்து கொண்டிருந்த ஒரு ஆதரவற்ற சிறுவனை இவர் கண்டெடுத்து தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார். அந்தச் சிறுவனுக்குத் தன்னைப் பற்றிய அடையாளமாக தன் பெயரைத் தவிர வேறு எதையுமே சொல்லத் தெரியவில்லை. அது ஒரு இஸ்லாமியப் பெயர்.

ஆம்…. அவன் ஒரு இஸ்லாமியச் சிறுவன். யோகியை ஒரு தீவிர ஹிந்துத்வவாதியாக பட்டயமிடும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது, யோகியின் வலது கரமாக இருக்கும் இந்தச் சிறுவன் இப்போதும் ஒரு இஸ்லாமியன் என்பதே……! இவர்மீது வெறுப்பு அரசியலை உமிழ்பவர்கள், தங்களை நடுநிலை என்று சொல்லிக்கொள்பவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது இதுவே….!

அதே நேரத்தில், "தாய் மதம் திரும்ப ஆசைப் படுபவர்களை கர் வாப்ஸி மூலம் ஹிந்து மதத்திற்கு அழைத்துவந்துள்ளார்"…!

இந்தியாவில் இருக்கும் எத்தனையோ மடங்களில் யோகிகளாகவும், பண்டித்தர்களாகவும் இருப்பவர்களில் பலர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களே….! இந்தச் செய்தியை வெளிக் கொணர இனிமேல் பிஜேபி முனையும் என்பது சந்தோஷமான செய்தி. இடதுசாரிகளால் பா.ஜ.க ஒரு உயர்ஜாதியை ஆதரிக்கும் அரசியல் கட்சி என்கிற மாயை இனிமேல் உடைத்தெறியப்படும்.

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த எத்தனையோ ஆழ்வார்களும், நாயன்மார்களும், தாக்கூர்களும், ரவிதாசர்களும் இறைத் தொண்டு ஆற்றியதை பொதுவெளியில் கொண்டுவர மோடிஜி இப்போது செய்துள்ள இந்தச் சமுதாயத் சீர்திருத்தம் பெரிதளவில் பயன்படும்.

உண்மையான சகிப்புத்தன்மையும், அற்புதமான நாகரிகமும் கொண்ட ஹிந்துமதம் மூலம் அதன் தத்துவங்களை உலகளாவிப் பரவச் செய்ய இவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தியது ஒரு முதல் படிக்கல்லாக அமையலாம்.

இவரை ஹிந்துமத வெறியார் என்று குற்றம் சாட்டுபவர்கள், அவர் எத்தனை பேருக்கு ஃபத்வா கொடுத்தார் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

இனிமேல் பாரதத்தில் இப்படித்தான்…..!
ஜெய்ஹிந்த்!
பாரத் மாதாகி ஜே!

Leave a Reply