தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். இந்நிலையில் இளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டது , இது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை

ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

10 தொகுதிகள் இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கியதன் காரணமாக நீண்ட நாட்களாக கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது என காங்கிரஸ்சார் கருதுகின்றனர்.

எதற்கு இந்த அதிருப்தி ? எப்படி இருந்தாலும் பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைவிட மோசமான தோல்வியை இந்தகட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் அடைவது என்பது உறுதி. மக்கள் மத்தியில் உள்ள காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு அதிருப்தி அலையும், விரக்தி அலையும் தெரிய வில்லையா? அதுவரை இவர்களது கலாச்சாரமான சட்டை கிழித்தல்…வேஷ்டி உருகுதல்,,மண்டை உடைத்தல் தொடரட்டும். கோஷ்டி மோதல்கள் ஆரம்பமாகட்டும்..!         ;-   thamarai talk

Leave a Reply

Your email address will not be published.