இளம் பெண்ணை மானபங்கம் செய்த 20க்கும் அதிகமான குடிகார கும்பல்  அசாமில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் 20க்கும் அதிகமான குடிகார கும்பல் ஒன்று இளம்பெண்ணை மானபங்கம்செய்த சம்பவம் பெரும்பரபரப்பை உருவாக்கியுள்ளது .

அசாமில் மதுபான கடைக்கு இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன்

வந்திருக்கிறார். அப்போது போதையிலிருந்த 20 பேர்கொண்ட கும்பல் அந்தபெண்ணை சுற்றி வளைத்து மானபங்கப்படுத்தி உள்ளனர்.

பொதுஇடத்தில், அந்தபெண்ணை முடியை பிடித்திழுத்தும்,மேலே தூக்கியும், கீழே போட்டும், அடித்து உதைத்தும், ஆடைகளை இழுத்து, கிழித்தும் மானப்பங்கம் படுத்தியுள்ள்னர்.

சுமார் அரை மணி நேராமக அந்தக்கும்பலின் அட்டகாசம் நீடித்துள்ளது அந்தபகுதிக்கு காவல்துறையினர் வந்தே நிலைமையை சரி செய்துள்ளனர். இதை தொலைக் காட்சி நிறுவனம் ஒன்று அப்படியே படம் பிடித்து ஒளிபரப்பாக்கி விட்டது. இது அசாம் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும்நெருக்கடியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Reply