அரசு அமைப்புகள், அரசாங்கதுறை மற்றும் அரசியல் கட்சிகளின் ஃபேஸ்புக் பிரபல தன்மையை அறிந்துகொள்ள ஃபேஸ்புக் முடிவுசெய்திருந்தது. இதற்கென இந்திய ஃபேஸ்புக் வாடிக்கையாளர் களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

ஃபேஸ்புக் நடத்திய கணக்கெடுப்பில் 2017-ம் ஆண்டுமுழுவதும் இந்தியாவில் அதிகவரவேற்பை பெற்றிருக்கும் ஃபேஸ்புக் பக்கங்கள் சார்ந்தகேள்விகள் இடம்பெற்றிருந்தது. மத்திய அரசு அமைப்புகள், அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஃபேஸ்புக் வாடிக்கை யாளர்கள் அளித்திருக்கும் வரவேற்பு பிரத்யேக பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2017 வரையிலான கால கட்டத்தில் அதிக ரியாக்ஷன், ஷேர் மற்றும் கமெண்ட்களை பொருத்து பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அதிகம் விவாதிக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக தேர்வு ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்திருக்கின்றனர். இவரைதொடர்ந்து மாநிலங்களவையின் பிரபல உறுப்பினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஃபேஸ்புக்கில் பிரபல அலுவலகங்களாக இந்திய பிரதமர் அலுவலகம் (PMO India) மற்றும் இந்தியகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் (President of India, Ram Nath Kovind) அலுவலகம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. பிரபலமான அரசு துறைகளில் மத்திய வெளியுறவுதுறை முதலிடம் பிடித்திருக்கிறது.

அரசு திட்டங்களில் MyGov இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்டவை பிரபலமாக இருந்துள்ளன. பிரபல ஆயுத படைகளில் இந்தியராணுவம் ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருந்துள்ளது. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பிரபலமாக இருந்துள்ளனர்.

அரசியல் கட்சிகளை பொருத்தவரை பா.ஜ.க முதலிடத்தில் உள்ளது.  ஆம். ஆத்மி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருந்துள்ளன. பிரபலமான அரசு சுற்றுலா கழகமாக கேரளா மாநில சுற்றுலா துறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில சுற்றுலாகழகங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

Leave a Reply