அகமது படேலின் வெற்றியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைசேர்ந்த படேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை விரைவில் சட்டப்படி எதிர்கொள்ளபோவதாக அக்கட்சியை சேர்ந்த குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானி தெரிவித்துள்ளார். தேர்தலில் தங்கள் கட்சி பணபலம், ஆள்பலத்தை பயன்படுத்தியதாக எழுந்தபுகாரையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகமதுபடேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு 15 MLA-க்கள் ஓட்டுக்களை பாழாக்கியுள்ளார் என்றார். காங்கிரஸ் உடைந்துள்ளது என்பதே பாரதிய ஜனதாவின் எதார்த்தநிலை.
அதற்காக பண பலம் மற்றும் ஆள்பலத்தை பயன்படுத்தியதாக எங்கள் மீது குற்றம்சாட்டுவது தவறு என்றார்.