அசாமில் 15 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டுவந்ததையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா காங்கிரஸ் அரசியல் முற்றுப்பெற்றது என்று கூறியுள்ளார்.

அசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முற்றுபெற்றுள்ளது என்று பாஜக.தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சட்ட சபை தேர்தல்களில் பாஜக-வின் நிலை மோடி அரசு கடந்த 2 ஆண்டுகள் செயல்பட்ட விதத்திற்கான முத்திரையாகும்.

மேற்குவங்காளம், கேரளா, தமிழ்நாடு தேர்தல்களில் நம்தொண்டர்களின் ஈடு இணையற்ற பணி மற்றும் தியாகம் இம்மாநிலங்களில் பாஜக.,வுக்கு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து கொடுத்துள்ளது.

இவர்களுக்கு கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply