இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்த அச்சத்திலிருந்து வெளியே வரவேண்டும்' என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது: உலகிலேயே நிதிசார்ந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் மிகப் பெரிய திட்டம் ஜன்தன் திட்டமாகும். ஜன்தன் திட்டத்தில் 53 சதவீத பெண்கள் கணக்கு துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் 83 சதவீத வங்கி கணக்குகள் ஆதார் எண் மூலம் துவங்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள கணக்குகளுக்கு 24.4 கோடி ரூபே அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானதாகவோ, பலவீன மானதாகவோ இல்லை. உலகிலேயே இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், அச்சத்திலிருந்து வெளியேவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Leave a Reply