அதிமுகவின் கடைசி அத்தி யாயம் எழுதப் பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைசட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு கிடைத்த ஒருவரப்பிரசாதம்

முத்தலாக் தடைச் சட்டத்தால் பல்லாயிரக் கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர் . தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள் தங்களின் நிலைகளை இழந்து வருகிறது. அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.
 
திமுக கடைசி அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டி ருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை புதிய மாற்றமாக இருக்கம் என மக்கள் நினைக்கலாம்  என்றும் கூறினார்.

Leave a Reply