டி.டி.வி தினகரனின் செயல் பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று பாஜக ராஜ்ய சபா எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார். பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் இன்று கோவில் பட்டியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக சார்பில் வரவேற்பு தெரிவிக்கிறேன். இருபிரிவுகளும் இணைந்தது வரவேற்கத்தக்கது. அரியலூர் மாணவி அனிதாமரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக.,வில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர் அதிமுகவில் உரிமை கோருவது தவறு. அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

Leave a Reply