அதிமுக இணைப்பில் பாஜக.,வுக்கு எந்த பங்கும் இல்லை என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் ஆட்சியை நிலைகுலைய வைப்பது தமிழகத்துக்குவரும் நல்ல திட்டங்களை கெடுப்பதாக அமையும். அந்த ஒருகாரணத்துக்காகவே இரு அணிகளும் இணைய வேண்டும் என விரும்புகிறோம். இதைத்தவிர்த்து அதிமுக இணைப்பில் பாஜகவுக்கு வேறு எந்தபங்கும் இல்லை. அதிமுக ஆட்சியி்ல் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் நடைபெற்றால் பாஜக கடுமையாக எதிர்க்கும்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி சொகுசுவிடுதியில் குழந்தைகள் போல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் விளையாட்டுகளை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

Leave a Reply