அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது; அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் பொறுப்பே கிடையாது என்பது உள்ளிட்ட அதிரடி தீர்மானங்கள் அக்கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்டுள்ளன.

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப் பட்டுள்ளன. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனி சாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக அதிமுக கட்சியின் விதி 19ல் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. மேலும் பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள எடப்பாடி பழனி சாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை, மற்றும் நீக்கம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் ஓ.பி.எஸ், ஈபிஎஸ்க்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் துணை ஒருங்கிணைப் பாளர்களாக கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கம் எம்பியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply