சென்னையில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுவேட்டையை தொடங்கிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மசூதி தொழுகைநேரத்தில் பிரசாரத்தை தொடங்குவதாக கூறினார்.
 
பா.ஜனதா கட்சியின் சைதாப்பேட்டை வேட்பாளர் காளிதாசை ஆதரித்து, சென்னை ஜாபர்கான் பேட்டையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்றுகாலை 10 மணிக்கு பிரசாரம்செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இதற்கிடையில் பகல் 12.40 மணிய ளவில் மத்திய மந்திரி சீதாராமன் அங்குவந்தார். அவரிடம் நிருபர்கள், வெயில்நேரத்தில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல்கமிஷன் சொல்லி உள்ளது. ஆனால் நீங்கள் உச்சி வெயிலில் பிரசாரம் செய்கிறீர்கள்? என்றுகேட்டனர். அதற்கு அவர், ‘‘தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். தற்போது மனுதாக்கல் செய்யவேண்டும் என்பதால் இந்த நேரத்தில் வந்திருக்கிறேன்’’ என்றார். 
 
தொடர்ந்து நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள அதிமுக.வும், தி.மு.க.வும் ஊழல் செய்வதில்தான் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகத்திற்கு ஒரு முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. பிரதமர் மோடி வருகிற 6-ந் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்’’ என்றார். 

 

அதன்பின் திறந்தவேனில் பிரசாரத்தை தொடங்கிய நிர்மலா சீதாராமன், ‘‘என்னுடைய பிரசாரத்தை மசூதியில் தொழுகை நடைபெறும் இந்தநேரத்தில் தொடங்கி இருக்கிறேன். உங்களது ஆதரவை பா.ஜ.க வேட்பாளருக்கு தாருங்கள் என்றார். 

 

Leave a Reply