மானியம் இல்லா சிலிண்டர்களுக்கான விலை மாநில தலை நகரங்களில் 53 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில்  மானியம் இல்லா கேஸ்சிலிண்டர் விலை  உயர்ந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 1) முதல் 14.2 கிலோ எடைகொண்ட மானியம் இல்லா சிலிண்டரின் விலை 53 முதல்  56.5 ரூபாய்வரை குறைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் ஆயில்நிறுவனம் 53 ரூபாய் விலை குறைத்துள்ளது.

டெல்லியில் 858 ரூபாய்க்கு வழங்கப்பட்டுவந்த சிலிண்டர் இனி 805 ரூபாய்க்கும், சென்னையில் 881 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 826 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது. விலைகுறைப்பு கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கும் இந்த விலைக் குறைப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.