விவசாயிகளின் வருமானத்தை உயர்த்து வதற்கும், வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தமசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா-2020 திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம்செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்மூலம், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.

அரசின்அமைப்புகள் அதிகமான தலையீடுகளை உண்டாக்குமோ என்ற அச்சமின்றி தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் வேளாண் துறையில் அதிகமான முதலீடுகளை செய்யமுடியும் என்பதாகும்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்.பி. கவுசலேந்திர குமார் இந்தமசோதாவை ஆதரித்துப் பேசினார். அவர் பேசுகையில், ”இந்தமசோதா விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும். குறைந்தவிலையில் அவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. பிபி சவுத்ரி பேசுகையில், ”இந்தமசோதா விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோர்களுக்கும் பயனளிக்கும் மசோதா. வேளாண்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தொலை நோக்குடன் எடுக்கப்பட்ட முடிவு” எனத் தெரிவித்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி சஞ்சீவ் குமார் சிங்காரி, பிஜூ ஜனதா தளம் எம்.பி. பாரத்ரூஹரி மகதப் ஆகியோர் இந்தமசோதாவை ஆதரித்துப் பேசினர்.

இறுதியில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை ஆதரவில் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.