ஆனந்த் வெங்கட் அவர்களின் பதிவு …

நேற்று ஒரு நன்னாள். மேதகு கவர்னரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு முக்கியமான நிகழ்ச்சி அக்டோபர் மாதம் வருகிறது. அதற்காக தலைமை விருந்தினராக இருக்க அழைப்பு விடுக்க சென்றிருந்தோம். ஒப்புக்கொண்டார். புறப்படும்போது அத்தி வரதருக்காக அவர் உழைத்த உழைப்பை பற்றி பாராட்டி நன்றி தெரிவித்தோம்.

நடந்த விஷயங்கள் உங்களுக்காக. யாருக்கும் தெரியாமல் போய்விடக்கூடாது.

1 RSS அத்தி வரதர் வைபவத்தை பற்றி கூறி கலெக்டரிடம் பேசினார்கள். உளவுத்துறை எத்தனை பேர் எதிர்பார்க்கலாம் என்றதற்கு ஆயிரக்கணக்கில் என்று பதில் கூறியுள்ளனர். RSS தரப்பு 50 லட்சம் பேர் வருவார்கள் என்று கூறியுள்ளார்கள். சிரித்துவிட்டார்கள் அரசு தரப்பினர்.

2 கடுப்பான RSS, நேரடியாக கவர்னரிடம் சென்று விஷயத்தை கூறி, இதை சரியாக அணுகவில்லையென்றால் பெரும் குழப்பமாகும். 40 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வைபவம். பெரும் கூட்டம் வந்தே தீரும். நீங்கள் தலையிட வேண்டும் என்று கூறியதும், நேரடியாக கவர்னர் அதிகாரிகளை கூப்பிட்டு பேசியுள்ளார்.

3 செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும், கவர்னர் தந்த அழுத்தத்தால் நடந்துள்ளது. அதுவும் ஏனோதானோவென்று. நிகழ்ச்சி துவங்குவதற்கு சில நாட்கள் முன்வரை, நிர்வாகம் ஒத்துழைப்பு தராமல் இருக்க, நேரடியாக கவர்னரே கோவிலுக்கு வந்து என்னென்ன நடக்கிறது என்று பார்வையிட்டு, இரவு தங்கியிருந்து, விடியற்காலை முதல் தரிசனம் செய்தார்.

4 சங்க அதிகாரிகள் வயதும், ஆரோக்கியம் பாராமல் பின்புலத்தில் இருந்து உழைத்ததால் இறந்தவர்கள் எண்ணிக்கை 10 12 என்று முடிந்துள்ளது. என்னத்தையோ செய்துகொள்ளுங்கள் என்று விட்டிருந்தால் இன்னும் பல பேர் போய் சேர்ந்திருப்பார்கள்.

5 ஊரை சுத்தம் செய்த சுகாதாரத்துறை ஊழியர்கள் 3000 பேருக்கு கலெக்டர் மரியாதை செய்தார். நிகழ்ச்சி முடிகிறது என்றதும் வி எச் பி, RSS ஹிந்து முன்னணி பாஜக என்று பல பரிவார் அமைப்புகள் பலர் சேர்ந்து ஊரையே சுத்தம் செய்துள்ளார்கள்.

6 கோவிலுக்கு அருகிலேயே இடம் பிடித்து பலருக்கு தண்ணீர், உணவு, சிரம பரிகாரம் என்று உழைத்துள்ளனர்.

7 தான் நிர்வாகம் செய்யும் மாநிலத்தில் ஒரு வைபவம். அதற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், எல்லா மத்திய மந்திரிகளுக்கு தகவல் சொல்லி பலரை வரவழைத்துள்ளார்.

கடைசியில், உங்களுக்குத்தான் முழு நற்பெயரும் என்று நாங்கள் சொல்ல, இல்லையில்லை நீங்கள் தந்த அழுத்தத்தால்தான் எனக்கு விஷயத்தின் தாக்கம் புரிந்தது. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று வெளியே சொல்லி, நற்பெயரை எடுத்துக்கொள்வீர்கள் என்று எண்ணினேன். நீங்களும் பேசவே இல்லை என்று கூறினார்.

பிகு: இந்த மொத்த விவரத்தையும் RSS காரர்கள் யாரும் என்னிடம் சொல்லவில்லை. கவர்னர் சொல்லவே, அனைத்தும் தெரிந்தது.

Comments are closed.