நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியை நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத்தலைவராக நியமிப்பதாக, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ராமகாஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்கள் 14 பேரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனால் நியமிக்கப் பட்டுள்ளனர். மூத்தத் தலைவர் அத்வானி தலைமையிலான இக்குழு, நெறிமுறைக்குப் புறம்பாகச்செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும், அவர்கள்மீது சுமத்தப்படும் புகார்கள் குறித்தும் விசாரித்து, சபாநாயகருக்கு அறிக்கையும் சிபாரிசும்செய்யும்.

இந்தக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பாடுகளைத் தானாக முன்வந்து விசாரித்தும் அறிக்கைகள் சமர்ப்பிக்கும். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவுக்கு, நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக, தம்பிதுரை எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுநிதி திட்டத்தையும், ஆராயும் குழுத் தலைவராக சபாநாயகரால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply