இத்தனை ஆண்டுகளாக இந்தப்பிராந்தியம் அதன்போக்கில் விடப்பட்டிருந்தது. ஆனால் மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது. இங்கு உண்மையான மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும். மிரட்டி பணம்பறிக்கும் அரசியல் இருக்கும்வரை மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமில்லை. அநீதி எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் உண்மையான மாற்றத்தை விரும்புகிறோம். மேற்குவங்கத்தை ஆட்சி செய்தவர்கள், மாநிலத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். தாய், நிலம் மற்றும் மக்கள் என்று முழங்குவோர் மேற்குவங்கத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

மேற்குவங்க மக்களுக்கு குடிநீர் வழங்க திரிணமுல் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. குடிநீர்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.1,700 கோடிக்கு அனுமதி அளித்தது. ஆனால் ரூ.609 கோடி மட்டுமே திரிணமூல் அரசு செலவிட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை அவர்களே வைத்துள்ளனர். தண்ணீ ருக்கு தவிக்கும்மக்கள் பற்றி இவர் கள் கவலைப்படவில்லை. இவர்கள்தான் வங்காளத்தின் புதல்விகளா?

வங்கிக் கணக்குகளுக்கு மத்திய அரசு நேரடியாக பணம் அனுப்புகிறது. ஆனால் மிரட்டிப்பணம் பறிக்கும் திரிணமூல் கட்சியினர் அதை மாநில அரசின் திட்டங்களுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.இந்த மனோபாவம்தான், விவசாயி களை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி யுதவி பெறவிடாமல் தடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:

Comments are closed.