அரசியல்சாசனத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தையை மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது மத்திய அரசின் கருத்தல்ல என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்களித்துள்ளார்.

இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆனந்த் குமார் பதவி விலக வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் இப்பிரச்னை குறித்து விளக்க மளித்த அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே, பிரதமரும் மத்திய அரசும் அரசியல்சாகனத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திப்பதாகக் கூறினார். இதை ஏற்காத எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மறுபடியும் அவை ஒத்தி வைக்கப் பட்டது.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் அனந்த்குமார் பேசியது அரசின் கருத்தல்ல என விளக்கமளித்தார்.

Leave a Reply