பாஜக மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் அனந்த் குமார் நேற்று நள்ளிரவில் காலமானார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் 1959 ஜூலை 22ல் பிறந்தவர் அனந்த குமார். மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் பாஜக.,வில் இணைந்தார். பாஜக கட்சியை சேர்ந்த இவர் முதல் முறை 1996ல் இருந்து பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியில் இருந்து வெற்றிபெற்றவர். அவருக்கு மிகவும் ராசியான பெங்களூர் தெற்குதொகுதியில் இருந்துதான் அதன்பின் வரிசையாக லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார்.

1996ல் இருந்து 2014 வரை 6 முறை அதேதொகுதியில் வெற்றிபெற்றார். ஒரு முறை கூட தேர்தலில் தோல்வி அடையாதவர்.2003ல் கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். அவர் தலைவராக இருந்த 2004 சமயத்தில் தான் கர்நாடகாவில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றது.

பாஜக தலைவர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சி தலைவர்களுடனும் நல்ல நட்பில் இருந்தவர். கர்நாடக முதல்வர் குமார சாமிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாதம் முன் இவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப் பட்டது. இவர் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவில் இயற்கை எய்தினார்.

 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : மத்திய அமைச்சரும், பார்லி., உறுப்பினருமான அனந்த் குமார் மறைவு கேட்டு வேதனை அடைந்தேன். இது நாட்டிற்கு பேரிழப்பாகும். குறிப்பாக கர்நாடக மக்களுக்கு மிகுந்த இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

 

President of India@rashtrapatibhvn

Sad to hear of the passing of Union minister and veteran parliamentarian Shri H.N. Ananth Kumar. This is a tragic loss to public life in our country and particularly for the people of Karnataka. My condolences to his family, colleagues and countless associates

5,725

Twitter Ads info and privacy

1,120 people are talking about this

Twitter Ads info and privacy

 

துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு : உடல்நலக்குறைவால் அனந்த் குமார் மரணமடைவார் என எதிர்பார்க்கவில்லை. உடல்நலம் தேறி மீண்டும் அவர் பொதுசேவையில் ஈடுபடுவார் என நினைத்தேன். அவரது மறைவு வேதனை அளிக்கிறது.

பிரதமர் மோடி : எனது நண்பரும், அமைச்சரவை உறுப்பினருமான அனந்த் குமாரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இளம் வயது முதல் தனது வாழ்க்கையை பொது வாழ்விற்காக அர்ப்பணித்த மறக்க முடியாத தலைவர். அவரது நற்சேவை எப்போதும் நமது நினைவில் இருக்கும்.
 

 

Narendra Modi@narendramodi

Extremely saddened by the passing away of my valued colleague and friend, Shri Ananth Kumar Ji. He was a remarkable leader, who entered public life at a young age and went on to serve society with utmost diligence and compassion. He will always be remembered for his good work.

15.4K

Twitter Ads info and privacy

4,519 people are talking about this

Twitter Ads info and privacy

 

பா.ஜ., தலைவர் அமித்ஷா : அனந்த்குமார் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றிய குறிப்பிடத்தக்க நிர்வாகி. அவரது மறைவு பா.ஜ.வுக்கும் இந்திய அரசியலிலும் பேரிழப்பு. அவரது இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அவரது குடம்பத்தினரும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்., தலைவர் ராகுல் : பெங்களூருவில் இன்று காலை மத்திய அமைச்சர் அனந்த் குமார் மறைந்ததற்காக வருந்துகிறேன். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் : அனந்த்குமாரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. இது அரசிற்கும், கட்சிக்கும் மிகப் பெரிய இழப்பு. அவர் நல்ல நிர்வாகி. புகழ்பெற்ற தலைவர். உ.பி., அரசு சார்பில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி : எனது சிறந்த நண்பரை இழந்துவிட்டேன். எம்பி.,யாகவும் மத்திய அமைச்சராகவும் நாட்டிற்கு முக்கிய பங்காற்றிய மதிப்புமிக்க அரசியல்வாதி அவர். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் ஆற்றலை இறைவன் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் அளிக்க வேண்டும்.

 

 

 

 

 

Leave a Reply