மறைந்த மத்திய அமைச்சர் அனந்த குமாரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜேபி.நட்டா பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் அஞ்சலிசெலுத்தினர்.

 

எனது நண்பர் அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி, பாஜகவின் மிகப் பெரிய சொத்தாக இருந்த அனந்த குமார், கர்நாடகாவில் கட்சியை வலுப்படுத்த பாடுபட்டவர் என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply