பாராளுமன்றத்துடன் மழைக்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பாராளமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும். அனைத்துகட்சி எம்.பி.க்களும் நாட்டின் நலன் கருதி குறிப்பிடத்தக்க முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த கூட்டத்தொடர் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடுமுழுவதும் பருவ மழைக்காகவே காத்திருக்கிறார்கள். இதனால் இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமையும் என்று நம்புகிறேன்.

ஜி.எஸ்.டி.யின் நோக்கமே பலத்தை வளர்ப்பதற்கான ஒற்றுமையாகும். இதேநம்பிக்கை நடப்பு கூட்டத்தொடரிலும் பிரதிபலிக்கும். ஜி.எஸ்.டி. குறித்த ஆக்கப் பூர்வமான விவாதம் இந்த கூட்டத்தொடரில் நடைபெறும் என்று நம்புகிறேன்.

மழைக்கால கூட்டத்தொடர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பல முன்னேற்றங்களை தர உள்ளது. ஜி.எஸ்.டி.க்கு பின்னர் புதியதுவக்கத்தை பார்க்கமுடியும்.இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Leave a Reply