மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்து அரசு கல்லூரிகளிலும் எஸ்.சி மாணவர்களுக்கு இலவசகல்வி வழங்கப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பகட்டணம் முதல் கல்விக்கட்டனம் வரை சலுகை அளிக்கபட்டு வருகிறது.

பல மாநிலங்களில் பள்ளிப் படிப்பு வரை எஸ்சி,எஸ்டி உள்பட அனைத்து மாணவர்களுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்த வகையில் எஸ்சி மாணவர்களுக்கு கல்லூரிகளிலும் இலவசகல்வி கொடுக்க மத்திய பிரதேச மாநில அரசு முன்வந்துள்ளது. மகிஹார் நகரில் நடைபெற்ற சன்னியாசி ரவிதாஸ் பிறந்த நாள் விழாவில் ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று பேசினார்.

அப்போது, மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்து அரசுகல்லூரிகளிலும் எஸ்சி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டுமுதல் இலவச கல்வி வழங்கப்படும். ஆண்டுதோறும் சன்னியாசி ரவிதாஸ் பிறந்த தினத் தன்று மகாகும்பவிழா நடைபெறும் , அவர் பிறந்த ஊரான வாரணாசிக்கு மக்கள் புனிதயாத்திரை சென்று வர அரசு சார்பில் இலவச ஏற்பாடு செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.

Leave a Reply