மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. வரலாறுகாணாத அளவில் பெய்த கன மழைக்கு சென்னை மாநகரம் ஸ்தம்பித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது . வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்கு வரத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. சாலைகளில் போக்கு வரத்தும் முடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளநிலவரம் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலை பேசி வழியாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்து ள்ளதாக முதல்வர் தெரிவித்ததாக தெரிகிறது.

தொடர்மழையால் தமிழகம் அவதியுற்றுவரும் துரதிருஷ்டவசமான இந்நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் முழுஒத்துழைப்பும் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Leave a Reply