அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரிவிதிக்க முடியாது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சரக்குசேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மறைமுக வரியின் வருவாய் 70 சதவிதம் அதிகரித்துள்ளது. மேலும், 17 வரிகள் மற்றும் 23 கூடுதல்வரிகள் ஜிஎஸ்டி என்ற ஒரேவரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என பிரதாமர் மோடி தெரிவித்தார்.

மாநில அரசுகள், வணிகர்கள், பங்குதாரர்கள் ஆகியோரிடம் ஜிஎஸ்டி குறித்த கருத்துக்களை பெற்று, தேவையான மாற்றங்களை செய்துவருவதாக பிரதமர் கூறினார்.

“அனைத்து பொருள்களுக்கும் ஒரேவரி விகிப்பது எளிதான காரியம். ஆனால், பால் மற்றும் மெர்சிடஸ் காருக்கு ஒரேவரி விதிக்க முடியுமா?” என்று பிரதாமர் கேள்வி எழுப்பினார். “காங்கிரஸார் கூறுவதுபோல, அனைத்து பொருள்களுக்கும் ஒரே வரி விதித்தால், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தற்போது விதிக்கப் ப்ட்டிருக்கும் 5 சதவித வரியை 18 சதவிதமாக ஏற்றவேண்டும் என கேட்கின்றனரா?” என்று சுவராஜ் பத்ரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதால் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட ஒருநாடுகளின் ஒன்றான இந்தியாவில் புதியவரி விதிப்பு அமல்படுத்தும் போது பலமாற்றங்கள் ஏற்படும் என்றார். “17 வரிகள் மற்றும் 23 கூடுதல் வரிகள் ஜிஎஸ்டி என்ற ஒரேவரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளபோது, ஏற்பட்ட பிரச்சனைகளை உடனுக்குடன் சரி செய்ய முழுமுயற்சிகளும் எடுக்கப்பட்டன” என்றார்.

இந்தியா சுதந்தரம் பெற்றதில் இருந்து 68 லட்சம்பேர் மறைமுக சேவை வரிக்கு பதிவு செய்திருப்பதாகவும், ஜிஎஸ்டி அமலுக்கு பின்னர், 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

“400க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகள் குறைக்கப் பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட வில்லை. தினசரி பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அரிசி,கோதுமை, சர்க்கரை, மசாலா பொருட்கள் ஆகியவற்றுக்கு மொத்த வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply