நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படவேண்டிய அனைத்து மசோதாக்களையும் மத்திய அமைச்சரவை செயலகம் விரிவாகப் பரிசீலனைசெய்ய உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலர்களுக்கும் அமைச்சரவை செயலகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் அறிமுகம்செய்ய வேண்டிய மசோதாக்களின் உத்தேசவரைவை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்புமாறு அனைத்து அமைச்சகங் களையும் ஏற்கெனவே கோரியுள்ளோம்.

அவற்றை அமைச்சரவை செயலகம் விரிவாகப் பரிசீலனைசெய்ய ஏதுவாக மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாலோசனை உள்ளிட்ட வழக்கமான நடை முறைகளை முடித்த பின், உத்தேசவரைவுகளை அனுப்புமாறு அமைச்சகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சரவைச் செயலகம் அனுப்பிய மற்றொரு உத்தரவில், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாலோசனைகளை முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு குறைந்த பட்சம் 25 புதிய மசோதாக்கள் வர உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்திருந்தார்.

மழைக் காலக் கூட்டத்தொடர் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கி, அடுத்தமாதம் (ஆகஸ்ட்) 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Leave a Reply