மத்திய இணை அமைச்சர் ஜெயந்த்சின்ஹா தனது தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தை நிராகரித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, நாட்டின் பொருளாதாரம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு கடும்சரிவைச் சந்தித்திருப்பதாகவும் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து விட்டதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவின் மகனும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சருமான ஜெயந்த் சின்ஹா தனது தந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் மத்திய அரசு தொடர்பான அவரதுகருத்துக்களை நிராகரித்துள்ளார். புதியபாரதத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு அடிப்படைக் கட்டமைப்பு தொடங்கி அனைத்து மட்டத்திலும் பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொண்டு வருவதாகவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply