அனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே உள்ளது என அத்வானி கூறினார்.
மைசூரு நகர் ஊட்டி சாலையில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் 32 அடி உயரத்தில் அனுமன்சிலை உள்ளது. இங்குள்ள 3டி தொழில்நுட்பத்தை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தொடங்கிவைத்தார்.
அத்வானி பேசியதாவது:இந்துமதத்துக்கு மட்டும் தான் அனைத்து மதங்களை அரவணைத்து கொள்ளும் குணம் உள்ளது. அதனால்தான் நம் இந்தியாவின் கலாசாரத்தை பல்வேறு நாடுகளும் வியந்து பார்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்துமதம் மற்ற மதங்களின் நல்ல குணங்களை தன்னுடன் பொருத்திகொள்கிறது. இந்துமதத்தில் உள்ள நல்ல அம்சங்களை தெரிந்து கொள்வதால் மக்கள் நிம்மதி மற்றும் ஒற்றுமையுடன் உள்ளனர். சகிப்புதன்மை குணத்தாலேயேதான் நாட்டில் சகோதரத்துவம் வளர சாத்திய மாகிறது என்றார்.