மும்பை எல்பின் ஸ்டோன் ரயில்நிலைய நடை  மேம்பாலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 23 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தலைமையில் ரயில்வே வாரிய கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின்னர் ட்விட்டரில் அமைச்சர் பியூஷ்கோயல் கூறியிருப்பதாவது:

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக என்ற பெயரில் நடைமேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. 150 ஆண்டு கால இந்த நடைமுறையை மாற்றி அனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளுக்கான செலவுகள் குறித்து தன்னிச்சையாக முடிவுசெய்ய அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் அதிகாரம்வழங்கப்படும்.

இதன்படி, முதல்கட்டமாக மும்பை புறநகர் ரயில் நிலையங்களிலும் பின்னர் பயணிகள்நெரிசல் அதிகம் உள்ள மற்ற நிலையங்களிலும் கூடுதல் மின் ஏணி (எஸ்கலேட்டர்) அமைக்க அனுமதிவழங்கப்படும். அடுத்த 15 மாதங்களில் அனைத்து மும்பை புற நகர் ரயில்களிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

இவ்வாறு பியஷ் கோயல் கூறியுள்ளார்.

Leave a Reply