அனைவருக்கும் பொதுவான ஒரேசிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயுமாறு சட்ட ஆணையத்தை மத்திய அரசு கேட்டு கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் நீண்டகால கோரிக்கை . கடந்த 1998, 1999 ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்குவந்த போது பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புகிளம்பியது.
 
இதனைத் தொடர்ந்து தற்போது பொது சிவில் சட்டம் குறித்து ஆராயுமாறு சட்ட ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து முன்னர் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, இந்த விவகாரத்தை மத்தியசட்ட ஆணையத்தின் ஆய்வுக்கு விடலாம். இதில் ஒருமுடிவு எடுப்பதற்கு, பல்வேறு தனிநபர் சட்டவாரியங்களுடனும், சம்மந்தப்பட்ட அனைவருடனும் விரிவான ஆலோசனை நடத்தப்படும். ஆனால் அதற்கு கொஞ்சகாலம் ஆகும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply