முன்னாள் ஜனாதிபதிகள் ராதா கிருஷ்ணன், கலாம், பிரணாப் காட்டியவழியில் செயல்படுவேன் என, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கூறினார்.

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட பின்னர் ராம்நாத்கோவிந்த் பேசியதாவது: பணிவுடன் ஜனாதிபதி பதவியை ஏற்று கொள்கிறேன். இந்தபதவி கிடைத்துள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. நான் சிறிய கிராமத்தில் பிறந்தவன். எளிமையான குடும்பத்தில் பிறந்து உயர்ந்தபதவிக்கு வந்துள்ளேன்.

பதவியை அளித்த அனைத்து இந்தியர்களுக்கும் நான் கடமைப் பட்டுள்ளேன். எனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்.எனது பணியை திறம்படசெய்வேன். இந்தியா 70வது சுதந்திரதினத்தை கொண்டாட உள்ளது. அனைவருக்கும் வளர்ச்சி உறுதிசெய்யப்படும் போது, நாடு வளர்ச்சி பெறும். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அப்துல்கலாம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் காட்டியவழியில் செயல்படுவேன். நம் நாட்டின் பன்முகதன்மை பெருமைக் குரியது. நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமகனும் நாட்டை உருவாக்குகின்றனர். அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது. இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்துசெல்வோம். டிஜிட்டல் இந்தியா நமதுஇலக்கு. உலகம் நமது குடும்பம் என்றகொள்கையில், இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது. நாம் பலசாதனைகளை படைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply