பாரதிய ஜனதா எம்பிக்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்கவேண்டும் என பிரதமர் மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றியவர், பலமுறை அறிவுறுத்தியும், நாடாளுமன்ற அவை நிகழ்வுகளின்போது, கட்சியின் எம்பிக்கள் பங்கேற்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

பாஜக எம்பிக்கள் தங்கள் மனதில் என்னதான் நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்று காட்டமாக கேள்விஎழுப்பிய அவர், அனைவரையும்விட கட்சியே மேலானது என்பதை மனதில்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். தற்போது கட்சியின் தலைவர் அமித் ஷா மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதால், உறுப்பினர்கள் அனைவரது பங்கேற்பையும் அவர் உறுதிசெய்ய வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார்.

முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றம் மற்றும் விவாதங்களின் போது, ஆளும்கட்சி எம்பிக்கள் பலர் அவைக்கு வரத்தவறுவதால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நெருக்கடிகொடுப்பதற்கு வாய்ப்பாகி விடுவதாகவும் மோடி தெரிவித்தார்.

Leave a Reply