உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சுத்தம், சுகாதாரத்திற்கு புகழ்பெற்ற ஐரோப்பிய நாடுகளில்தான் இது அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் மிககுறைவு. இதற்கு காரணம் நம் வாழ்க்கைமுறை. இதை பலரும் தற்போது பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை பிரணிதாவின் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: இந்துக்கள் கைகூப்பி கும்பிட்டு மற்றவர்களுக்கு வணக்கம்சொன்னதை பார்த்து சிரித்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் இந்துக்கள் கைகளையும், கால்களையும் கழுவிசென்றதை பார்த்து சிரித்தார்கள். விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள். மரங்களையும் காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள்.

இந்துக்கள் சைவ உணவைமட்டும் சாப்பிடுவதை பார்த்து சிரித்தார்கள். யோகா செய்வதை பார்த்து சிரித்தார்கள். இறந்தவர்களை எரிப்பதை பார்த்துசிரித்தார்கள். இறுதி சடங்கில் கலந்துகொண்ட பிறகு குளிப்பதை பார்த்து சிரித்தார்கள். ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. மாறாக சிந்திக்கிறார்கள். இந்தபழக்கம் தான் கொரோனா பரவாமல் தடுக்கிறது. இது மதம் இல்லை. வாழ்க்கையின் வழி.

இவ்வாறு பிரணிதா எழுதியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரணிதா, தமிழில் உதயன், சகுனி, மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

Comments are closed.