இந்திய தொழில்நுட்ப கட்டுமான கண்காட்சி டெல்லியில் நடைபெற்றது. கண்காட்சியை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை வரவேற்று பல்வேறு விதமான பெயர்களில் அழைக்கப் படுவதாகக் குறிப்பிட்டார்.

இதனால் தேசத்தில் அபிநந்தன் என்ற பெயருக்கே புதியஅர்த்தம் கிடைத்துள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.

அபிநந்தனின் அற்புதமான வீரத்தால், நாடே பெருமை கொள்வதாகவும், 130 கோடி இந்தியர்களை ஊக்கு விக்கும் வகையில் நமது பாதுகாப்புப் படைகள் திகழ்வதாகவும், இந்தியாவின் நடவடிக்கைகளை உலகமே கவனிப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply