நிலக்கரி கடத்தல்தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ரூரிஜா பானர்ஜிக்கு சிபிஐ., சம்மன் அனுப்பிஉள்ளது.

சம்மனை நேரில் கொடுப்பதற்காக அவரதுவீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்றனர். ஆனால் ரூரிஜா வீட்டில் இல்லை. இதனையடுத்து, அங்கிருந்தவர்களிடம் சம்மனை அளித்துவிட்டு சிபிஐ அதிகாரிகள் திரும்பினர். அவர் எப்போதுவீட்டில் உள்ளாரோ அப்போது விசாரணை நடத்துவோம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மே.வங்க மாநிலத்தில் நிலக்கரியை கடத்துவதற்காக மாபியாக்கள், ஆளுங்கட்சி தலைவர்களுக்கு பணம்கொடுத்ததாக சிபிஐ குற்றச்சாட்டியுள்ளது. இந்தபணம், அபிஷேக் பானர்ஜி தலைவராக உள்ள திரிணமுல் காங்கிரசின் இளைஞரணியில் பொதுசெயலராக இருக்கும் வினய் மிஸ்ரா மூலம் அக்கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்தவழக்கில், வினய் மிஸ்ரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து அவர் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.