அரபு நாடுகளில் பொதுவாக மாற்றுமத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை. ஆனாலும், துபாயில் ஏற்கனவே இந்துகோவில் ஒன்று கட்ட அனுமதிக்கப்பட்டு அந்தகோவில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

இப்போது ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான அபுதாபியிலும் இந்துகோவில் கட்ட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அங்குள்ள அல்வத்பா என்ற இடத்தில் இந்து கோவில் கட்டிகொள்ள அபுதாபி அரசு 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு அபிதாபியில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது இதற்கான அனுமதியை ஐக்கிய அரபு அரசு வழங்கியது.

அந்த இடத்தில் தற்போது தனியார்கள் மூலம் நிதி திரட்டி கோவில் கட்டப் பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

துபாயில் வருகிற 11-ந்தேதி சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக அவர் மேற்கு ஆசிய நாடுகளுக்கு பயணம்செய்கிறார்.

முதலில் 9-ந் தேதி ஜோர்டான் செல்லும் அவர் அங்கிருந்து பாலஸ்தீனம் செல்கிறார். 10-ந்தேதி அபுதாபி செல்கிறார்.

அப்போது அங்கு கட்டப்பட்டுள் இந்துகோவிலை திறந்து வைக்கிறார். 11-ந் தேதி துபாய் செல்லும் அவர் மாநாட்டில் கலந்துகொள்வதுடன் இந்திய மக்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.

ஐக்கிய அரபு நாடுகளில் 26 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது அந்த நாட்டின் மக்கள்தொகையில் 30 சதவீதம் ஆகும். இவர்களில் பெரும் பாலானோர் இந்துக்கள் அவர்கள் வழிபடும்வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply