அப்துல் கலாமை வைத்து அரசியல்செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது, '' அப்துல் கலாம் நினைவகத்தில் அவரது வீட்டில் இருந்த போட்டோ படியே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவர் கர்நாடக இசைபிரியர். வீணையை மீட்ட கூடியவர். அவர் மீட்டிய வீணையும் அங்கு வைக்கப்பட்டுளளது. இதில் எந்தவித மாற்று சிந்தனையும் இல்லை.

இந்தியாவில் எவருக்கும் இல்லாத சிறப்பாக நினைவுமண்டபம் அமைக்கவேண்டும் என மோடி விரும்பி மண்டபம் அமைத்துள்ளார். அப்துல்கலாம் அனைத்தும் மதங்களையும் உயர்வாக கருதினார். பகவத்கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்று நுால்களையும் மதித்தார். திருக்குறளுக்கு தாங்கள்தான் உரிமையாளர்கள் போல் சிலர் முழங்குகிறார்கள்.

அப்துல்கலாமின் மீது உண்மையான பாசம் இருந்தால் விவாதபொருளாக மாற்றியிருக்க மாட்டார்கள். தயவுசெய்து கொச்சையான அரசியலுக்கு மாபெரும் மனிதர் அப்துல்கலாமை கொண்டுவராதீர்கள். அப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை,என்றார்.

Leave a Reply