முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது என பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு இதேநாளில் மேகாலயா மாநிலம் சென்றபோது மரணமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஊராட்சிக்குட்பட்ட பேய்க்கரும்பில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.

இந்நிலையில், அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. இந்நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது என பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: "நமது அன்பிற்குரிய அப்துல் கலாம் நம்மை விட்டு பிரிந்து இன்றுடன் ஒருவருடமாகிறது. அப்துல் கலாம் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப முடியாது. அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Leave a Reply