அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது மிகக்கொடூரமான குற்றம், ஆனால் இதை வைத்து எதிர்கட்சிகள் அரசியல்செய்வது அவர்களது விபரீதமான சிந்தனையை காட்டுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

பசுக்களை கடத்தி செல்வதாக கூறியும், குழந்தைகளை கடத்துவதாகவும் அப்பாவிகளை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துவருகின்றன. சமூக வலைதளங்களில் வரும் தகவல்ளை உண்மையென நம்பி இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தவிவகாரம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி இன்று பேட்டியளித்தார். அப்போது அப்பாவிகள்மீதான தாக்குதல் குறித்த அவர் விரிவாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:

எதிர்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது இது முதன் முறையல்ல. அரசியில் நிர்பந்தம் காரணமாக அமையவிருக்கும் இக்கூட்டணி ஒவ்வொரு முறையும் தோல்வியைதான் தழுவியுள்ளன. வளர்ச்சி.. வேகமான வளர்ச்சி.. அனைத்திலும் வளர்ச்சி என்பதே எங்களது அடிப்படைகொள்கை.

கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளோம். வரும் பார்லிமென்ட் தேர்தலில் எங்களது சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

கடந்த பார்லி., தேர்தலில் பெற்ற வெற்றியைவிட அதிக வெற்றியை வரும் பார்லி., தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெல்லும். அனைத்து சாதனைகளையும் தகர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
 

பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள புதியசட்டத்தின் மூலம், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக தண்டிக்க முடியும். ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றன

கும்பலாக சேர்ந்து கொண்டு அப்பாவிகளை தாக்கி கொலை செய்யும் வன்முறை நடந்துவருவது வருந்ததக்கது. இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தாலும் அதனை ஏற்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபற்றி நானும், எங்கள் கட்சியினரும் தொடர்ந்து கண்டனம்தெரிவித்து வருகிறோம்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதிசெய்வதில் எங்கள் அரசு எப்போதுமே கவனத்துடன் செயல்படுகிறது. ஆனால் எதிர் கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியாலாக்கப் பார்க்கின்றன. அவர்களது விபரீதமான சிந்தனையே இதற்குகாரணம்.

வன்முறை மற்றும் குற்றச்செயல்களை அனைவரும் ஒன்றாகசேர்ந்து எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர் கட்சிகள் இதை வைத்த அரசில் செய்வது வேதனையானது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply